S.K. சுரேஷ் பாபு.
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான ஜி எஸ் டி யை திரும்ப பெற வேண்டும் ......
காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட மாநாட்டில் அகில இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொருளாளர் பி.எஸ். ரவி பேச்சு ....
எல் ஐ சி காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட மாநாடு ஐந்து ரோடு பகுதியில் உள்ள குஜராத்தி மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் ஆர் நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். நடைபெற்ற மாநாட்டில் இன்சூரன்ஸ் துறையிலே அந்நிய முதலீட்டை மேலும் உயர்த்த கூடாது. இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியினை முற்றிலுமாக விளக்கி இன்சூரன்ஸ் பரவலாகத்திற்கு வழி வகுக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான வன்முறைகளை கண்டித்தும்,இதை தடுக்க வலிமையான சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை ஒன்றிய அரசு தலையிட்டு உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை மத்திய அரசாங்கம் மேலும் விற்பனை செய்யக்கூடாது. சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக அமைந்திருக்கும் புதிய தொழிலாளர் நல சட்டங்களை மீண்டும் மாற்றி அமைக்க கூடாது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நடைபெற்ற மாநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் இணை செயலாளர் எஸ் ரமேஷ் குமார் பேசும்போது, நாடு முழுதும் உள்ள எம்பிக்களுக்கு காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட மகாஜனர் அடிப்படையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியும் மருத்துவ காப்பீட்டிற்கான ஜிஎஸ்டியை விளக்கிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார் இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு நிர்வாகம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது காப்பீட்டு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான ஜி எஸ் டி யை திரும்ப பெற வேண்டும் அதனை ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்து அறிவிக்க வேண்டும் அப்படி ஜிஎஸ்டி திரும்ப பெறாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்துவோம் அது தொடர்பாக சென்னையில் வரும் டிசம்பர் மாதம் நடக்கும் அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம் இதுபோக பொது காப்பீட்டு நிறுவனங்களைஒன்றிணைக்க வேண்டும் பொதுத்துறை வங்கிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் போது இதையும் அரசால் செய்திட இயலும் எனவே அந்த கோரிக்கையையும் ஒன்றிய அரசுக்கு நாங்கள் முன் வைத்திருக்கிறோம் என தெரிவித்தார்.
0 coment rios: