சனி, 31 ஆகஸ்ட், 2024

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். தவறும் பட்சத்தில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா ?.... சேலம் அருகே நடைபெற்ற வீரபாண்டி ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சேலம் மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சி வழங்கும் பகிரங்க சவால்....

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். தவறும் பட்சத்தில் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா ?.... சேலம் அருகே நடைபெற்ற வீரபாண்டி ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சேலம் மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சி வழங்கும் பகிரங்க சவால்....

சேலம் கிழக்கு மாவட்ட வீரபாண்டி ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் சேலத்தை அடுத்துள்ள அரியானூர் பகுதியில் நடைபெற்றது. அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வீரபாண்டி ஒன்றிய அவைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர், துணை செயலாளரகள் பாரப்பட்டி சுரேஷ் குமார், கருணாநிதி, சின்னதுரை, கோமதி மற்றும் மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட ஒரு முன்னிலை வகித்தார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  எஸ் ஆர் சிவலிங்கம், மற்றும் சேலம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி எம் செல்வகணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கும் 40 என்ற அடிப்படையில் வெற்றி வாகை சூடிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, நடைபெற உள்ள 2026 செப்டம்பர் தேர்தலில் கட்சி தொண்டர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து எவ்வாறெல்லாம் செயல்பட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவசமாகி திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிப்பது, அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் பெருந்திரளானோர் கலந்து கொள்வது தொடர்பாகவும் மற்றும் இனிவரும் எந்த தேர்தலாக இருந்தாலும் சரி கட்சித் தொண்டர்கள் எவ்வாறெல்லாம் பணியாற்றுவது என்ற ஆக்கபூர்வமான பணிகள் குறித்தும் பல்வேறு விதமான ஆலோசனைகளை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு டி எம் செல்வகணபதி நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். 
இதனை தொடர்ந்து உரையாற்றிய சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு எஸ் ஆர் சிவலிங்கம் பேசுகையில், தமிழகம் உட்பட நாட்டில் எவ்வளவு அரசியல் கட்சிகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றாலும் கூட திமுகவை போன்று தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் ஆன 40க்கும் 40க்கு வெற்றி பெற்ற ஒரே கட்சி இந்திய அளவில் திமுக மட்டுமே என்று பெருமிதம் தெரிவித்த அவர், ஏற்கனவே நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் என்பவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கை காட்டும் நபர் வெற்றி பெறுவார் என்று பேசியது வேடிக்கையாக உள்ளது என்றும் ஒருவேளை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் என்றால் எனது கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். அதேபோல ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த இளங்கோவன் என்பவர் விட்ட சவாலுக்கு எதிர் சவாலாக இந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் நான் கேட்கிறேன் அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்து அதே ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் தனது பதவியை அதாவது சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்ய தயாரா என்று பகிரங்கமாக சவால் விட்டார் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதுபோக இளங்கோவன் விடுத்த சவாலை ஏற்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலத்தில் ஒரு பொது மேடை அமைத்து இந்த சம்பவம் தொடர்பாக விவாதிக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். 

சேலம் கிழக்கு மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய திமுக பொது ப்பணர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் பேசிய இந்த பேச்சு சேலம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் மிகவும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பேரூர் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: