ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால், பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த பாரதி (வயது 27) என்பவர் சிறுமியின் தாயாரை கடந்த ஏழாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளன.
இதையடுத்து, பாரதி, சிறுமி மற்றும் அவரது தாயார் ஆகியோருடன் வசித்து வந்தார். மேலும், சிறுமியை அவர் வளர்ப்பு தந்தை போல் கவனித்து வந்தார். இந்நிலையில், பாரதி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமி தாயிடம் புகார் தெரிவிக்க, கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி கருவைக் கலைக்க பாரதி சிறுமியை நைசாக பேசி அவரை வெளியே அழைத்துச் சென்று விட்டார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் பாரதியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று (30ம் தேதி) காலை திருப்பூர் மாவட்டம் கருவலூர் பகுதியில் இருந்த பாரதி மற்றும் சிறுமியை போலீசார் மீட்டனர். பின்னர், பாரதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0 coment rios: