வியாழன், 22 ஆகஸ்ட், 2024

நாமக்கல்லில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். யாதவ மக்கள் இயக்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

நாமக்கல் மாவட்டம் சத்திய நாயகன் பாளையம் பகுதியை சேர்ந்த தஷ்மிதா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு வழங்கியுள்ள நிவாரணத் தொகை போதுமானதாக அல்ல.... யாதவ மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் அறிக்கை.

நாமக்கல் மாவட்டம் சத்தியநாயகன் பாளையம் பகுதியை சேர்ந்த சிறுமி தஷ்மிதாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை முயற்சி செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி சேலத்தில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு தமிழக முதலமைச்சர் இறந்து போன சிறுமி தஷ்மிதாவிற்கு மூன்று லட்ச ரூபாய் எனவும், மற்றவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் எனவும் நிவாரணம் அறிவித்தார். இது போதுமானது அல்ல. சிறுமி தஸ்மிதா சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு 10 லட்ச ரூபாய் வரை செலவழிக்கப்பட்டுள்ளது. 
குழந்தையின் பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். அன்றாடம் கட்டிட வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருபவர்கள். ஆகவே தமிழக முதலமைச்சர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட தஷ்மிதா என்ற சிறுமிக்கு நிவாரணத் தொகையாக 25 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் எந்த விதத்திலும் தப்பிவிடக் கூடாது. குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை தமிழகத்தில் இனி எந்த குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இந்த நிலை வந்து விடக்கூடாது என யாதவ மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் அறிக்கை வாயிலாக தமிழக முதல்வரை கேட்டுக்  கொள்வதாக கோரிக்கை வைத்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: