சேலம்
S.K. சுரேஷ்பாபு.
திரைப்பட நட்சத்திர நடிகர் விஜய் நேற்று கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். சென்னையை தொடர்ந்து தற்பொழுது சேலத்திலும் கட்சி கொடிக்கு எதிரான எதிர்ப்பு வலுத்துள்ளது.
தமிழ் திரைப்பட நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான வி விஜய் அவர்கள் நேற்று தமிழக வெற்றிகழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார். அவரது கட்சிக் கொடியில் இடம் பெற்றிருந்த யானை சின்னம் தொடர்பாக நேற்று முதலே பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பல்வேறு கண்டனங்களும் எதிர்ப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையை தொடர்ந்து தற்பொழுது சேலத்திலும் அதற்கான எதிர்ப்பு வெடித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன் நம்முடைய கூறுகையில், தமிழக வெற்றி கழகம் வெளிப்படுத்தியுள்ள அந்த கொடியில் இருக்கின்ற சின்னமான யானை சின்னம் ஏற்கனவே நாங்கள் இருக்கின்ற பகுஜன் சமாஜ் கட்சி சின்னமாக பயன்படுத்தி வருகின்றோம். தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் போட்டியிட்டு ஏற்கனவே உத்திரப்பிரதேசத்தில் நான்கு முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் தங்களது கட்சியின் தேசிய தலைவரான மாயாவதி அவர்கள். தவேக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தி உள்ளது என்பது இது இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிரானது என்று சொன்னால் ஏற்கனவே ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை எந்த விதத்திலும் மற்ற கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று தெரிந்திருந்தும், தலைமை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் இருந்த பின்பு கூட அதை அவர்களுக்கு யாரும் தெரியவில்லையான்னு தெரியல, அல்லது அது அவங்களுக்கு அது குறித்து யாரும் தெரிவிக்கலையா என்று தெரியவில்லை. தங்களது சின்னத்தை அவங்க கொடியில பயன்படுத்தி இருக்காங்க. இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இது மக்கள் மத்தியிலே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.
அதனால் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் இருக்கின்ற அந்த யானை சின்னத்தை அவர்கள் மாற்ற வேண்டும், மாற்றமில்லை என்று சொன்னால் மாநில தலைமை அதற்கு உகந்த சட்ட பூர்வ நடவடிக்கை எடுத்து அதனை மாற்ற வைப்போம் என்பதை நாங்கள் தமிழக வெற்றி கழகத்திற்கும் விஜய் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக கட்சி கொடி அறிமுகப்படுத்திய அன்றே தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மற்றும் மாநில கமிட்டி தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் இருக்கின்ற யானையை மாற்ற வேண்டும் என்று கண்டனத்தையும் அதற்கான அறிவிப்பும் அறிவித்த பின்பு கூட இன்னமும் விஜய் தரப்பிலிருந்து அதற்கான விளக்கங்களோ அல்லது அது எப்போது நீக்கப்படும் அல்லது எதற்காக பயன்படுத்தப்படுகின்றன அந்த விவரத்தை தெரிவிக்காமல் உள்ளார்கள். இதை பார்க்கின்ற போது அரசியல் கத்துக் குட்டியாக இருக்கின்ற விஜய் அவர்களுடைய அந்த தனத்தை தான் இந்த நிலை காண்பிக்கின்றது என்றும் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன் தமிழக வெற்றிக் கழக தலைமைக்கு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தங்களுக்கு சொந்தமான யானை சின்னத்தை தமிழக வெற்றிக்கழகம் பயன்படுத்துவது தவறு என்பதை சுட்டி காண்பித்து உடனடியாக அந்த யானையை நீக்க வேண்டும் என்பது நாங்கள் கோரிக்க வைக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
0 coment rios: