தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது
அருந்ததியர்களுக்கு 3 % உள் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியான நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்ததது. தீர்ப்பை வரவேற்கும் வகையில் பெருந்துறை விஜயமங்கலம், கள்ளியம்புதூர் அருந்ததியர் காலனியில் பெருந்துறை தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி தலைமையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நல மாவட்ட துணை அமைப்பாளர் லாரன்ஸ், மாவட்ட பிரதிநிதி தூயமணி, கிளைச் செயலாளர்கள் கே.ஆர்.பழனிசாமி, காலனி சந்திரன், ஆதிதிராவிடர் நல ஒன்றிய அமைப்பாளர் ரவி உள்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: