S.K. சுரேஷ்பாபு.
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம். வீணாக கடலில் கலக்கும் மேட்டூர் அணையின் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நிரப்பி செல்ல தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தல்.
விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய விலை பொருட்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை பகுதியில் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயலாளர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விவசாய விலை பொருட்களுக்கு, ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் எம் எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும், மரபணு விதைகளை தவிர்த்து, நாட்டு விதைகளை மத்திய அரசு ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் மேட்டூரில் திறக்கப்படுகின்ற காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து ஏரி, குளங்களை நிரப்பி விவசாயிகளின் நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும், கோதாவரி காவேரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்தினர்.
0 coment rios: