வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

தமிழக அரசு அருந்ததியர் சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஆதித்தமிழர் பேரவையின் மாநில இளைஞரணி செயலாளர் சந்திரன் வரவேற்பு..


சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அருந்ததியருக்கான மாநில அரசு வழங்கிய இட ஒதுக்கீடு செல்லும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு குறித்து, ஆதித்தமிழர் பேரவையின் மாநில இளைஞரணி செயலாளரும், சேலம் மத்திய மாவட்ட செயலாளருமான சந்திரன் கூறுகையில், அருந்ததியர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அருந்ததியர் மக்களின் போராளியாக அருந்ததியர் மக்களின் ஒப்பற்ற தலைவராக தலைவர் ஐயா அதியமான் அவர்கள் பல்வேறு போராட்டங்களையும் பல்வேறு அறவழி போராட்டங்களையும் நிகழ்வுகளையும் முன்னெடுத்து அருந்ததியர் மக்களின் விழிப்புணர்வுக்காக அங்கீகாரம் வரவேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி அவர்களுக்கு ஆன ஒரு இட ஒதுக்கீடும் அங்கீகாரமும் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு 2009 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலே ஐயா அதியமான்  அவர்கள் கோரிக்கையை வைத்தார். அதியமான் அவர்களின் கோரிக்கையை ஏற்று அருந்ததியர் மக்களுக்கான தனி சட்டம் தனி இட ஒதுக்கீடு உள்ள இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார் தலைவர் ஐயா அதிகமானவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஒரு சட்டம் நிறைவேற்றி அன்றைய நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை இன்றைய முதல்வர் தமிழகத்தின் தளபதி யார் அவர்கள் தலைமையிலே அது சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்தார். இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை சிலர் எதிர்த்து மேல்முறையீடு செய்து மாநில அரசுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க அங்கீகாரம் இல்லை என்று மேல்முறையீடு செய்து வழக்கானது கடந்த 10 ஆண்டு காலமாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலே ஏழு பேர் நீதிபதிகள் கொண்ட அமர்வானது அருந்ததியருக்கான மாநில அரசு வழங்கிய இட ஒதுக்கீடு செல்லும் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்த ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் ஐயா அதிகமான் அவர்களின் தலைமையிலே இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை ஒட்டுமொத்த அருந்ததியர் இயக்கங்களின் தலைவர்களோடு சந்தித்து தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இது சம்பந்தமாக இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு பெற்று தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான உயர்திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் அருந்ததியர் மக்களின் சார்பாகவும் எங்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த மனமார்ந்த நன்றியினையும் அருந்ததியர் சமுதாயம் உயர வேண்டும் அடுக்கப்பட்ட மூட்டையிலே அடிமுட்டையாக கிடைக்கின்ற இந்த அருந்ததியர் சமுதாயத்தின் வளர்ச்சியை முன்னேற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்த ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் ஐயா அதிகமானவர்களுக்கு நன்றியினை இந்த வேலையை தெரிவித்துக் கொண்டு இந்த தீர்ப்பினை பெற்று தந்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் அனைவருக்கும் இந்த தீர்ப்பு பெற்றுத் தந்தமைக்கு நன்றி கூறுகிறோம்.  ஒட்டுமொத்த அருந்ததியர் மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி கூறுகிறோம். கோரிக்கைகள் தொடர்ந்து அருந்ததியர் மக்கள் வாழ்வாதார வளம் பெறவும் அருந்ததியர் மக்களுக்கான உள் ஒதுக்கீடு  வலுப்படுத்தவும் உயர்த்தி தரக்கூடிய தமிழக முதல்வர் சந்தித்து ஐயா அதியமான் தலைமையில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: