வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

ஹாலிவுட் திரை உலகில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட ஏலியன் என்ற கதாபாத்திரம்.. சேலம் அருகே ஏலியன் சித்தர் என்ற பெயரில் கோவிலை கட்டி வரும் சித்தர்....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஹாலிவுட் திரை உலகில் வில்லன்கள் கதாபாத்திரத்தில்  மக்களை கவரும் விதமாக சித்தரிக்கப்பட்ட ஏலியன் என்ற கதாபாத்திரத்திற்கு சேலத்திற்கு அருகே நிலத்தடியில் திருக்கோவில்... சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர் என்றும் ஏலியன் சித்தர் என்ற பெயரில் கோவிலை உருவாக்க தனக்கு பணித்ததாகவும் சித்தர் பாக்யா  விளக்கம்...60விதமான பரிகாரங்களை தீர்க்கும் ஏலியன் சித்தர் கோவில் ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு.

சேலம் மாவட்டம் இரும்பாலை சாலையில் உள்ள புது ரோடு இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மல்லமூப்பம்பட்டி செல்லும் வழியில் மூலக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கிராம கவுண்டனூர் பகுதியில் அமைந்துள்ளது ஏலியன் சித்தர் கோவில் இந்தக் கோவிலை நிறுவியவர் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்கிற சித்தர் பாக்யா இரட்டை ஆருடை சிவலிங்கம் என்னும் திருக்கோவிலை முக்கால் ஏக்கர் பரப்பளவு நிலம் கொண்ட இடத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம் அமைத்துள்ளார் சிவலிங்கத்திலிருந்து பூமிக்கு அடியில் 11 அடி ஆழத்தில் இவருடைய குருநாதரான சித்தர் பாக்யா ஜீவசமாதி அருகே ஏலியன் சித்தர் மற்றும் அகஸ்தியர் ஆகியோருடைய சிலை வைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் இரட்டை ஆறுடை சிவலிங்கத்திற்கும் ஏலியன் சித்தர் அகஸ்தியர் ஆகியோருக்கு மாதந்தோறும் தேய்பிறை மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் மாலை 6 மணி அளவில் பூஜைகள் நடைபெறும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து லோகநாதன் என்னும் சித்தர் பாக்யா என்பவர் இது குறித்து கூறும் போது சக்தி தேவி பார்வதி தேவி சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒருங்கிணைந்த இரட்டை ஆருடை சிவலிங்கம் இங்கு அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன அப்போது ஏலியன் சித்தர் எனது உடலில் தோன்றி சிலை அமைக்க உத்தரவு வழங்கியதாகவும் அதன் பின்னரே எனது குருநாதர் ஆன சித்தர் பாக்யா ஜீவசமாதி அடைந்த அதே இடத்தில் ஏலியன் சித்தர் மற்றும் அகஸ்தியர் ஆகியோரை நிறுவி உள்ளதாக தெரிவித்தால் இதுவரை ஏலியன் சித்தர் உலகத்திலேயே எங்கும் கிடையாது தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் இங்கு நிறுவி இருப்பது தனி சிறப்பு உண்டு. ஏலியன் சித்தரை தரிசனம் செய்து அவர் முன் அமர்ந்தால் அனைத்துவித சகல வியாதிகளும் நீங்கி 60 விதமான பரிகாரங்களும் நீங்கி சிறப்புற்று செல்வர் மேலும் இந்த திருக்கோவிலில் நாலுமுக முருகன் ஐந்துமுக காளி ஜடாமுனி பெண்ரூபத்தில் காமதேனும் காலபைரவர் ராமர் நந்தி தாமரை மலத்தில் பலிபீடம் உலகில் வேறு எங்கும் கண்டிராத அளவிற்கு கருங்கற்களால் செய்யப்பட்ட இரட்டைக் கொடிமரம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளது கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திருக்கோவில் பணிகள் நடைபெற்று வந்தன என்றும் இன்னும் இரண்டு வருடங்களில் திருப்பணிகள் முடிவுற்ற கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தார் தற்போது பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர் ஒவ்வொரு கோவில்களுக்கும் வேண்டிய வரத்தை பெற தனித்தனியாக தான் செல்ல வேண்டும் ஆனால் இங்கு வந்தால் குழந்தை பாக்கியம் திருமண தடை தொழில் தடை  வாழ்வில் பிரச்சனை குடும்ப பிரச்சனை உள்ளிட்ட 60 வகையான பரிகாரங்கள் இங்கு உள்ள இரட்டை ஆருட சிவலிங்கம் மற்றும் ஏலியன் சித்தர் அகஸ்தியர் ஆகியவரிடம் தியானம் செய்தாலே 60 வகையான பரிகாரங்கள் தீர்க்கப்பட்டு வாழ்வில் சகல செல்வமும் பெற்று குடும்பம் மகிழ்வித்து இருக்கும் தற்போது திருப்பலிகள் நடைபெற்று வருவதால் குறைந்த அளவே பூஜைகள் நடைபெற்று வருகின்றன கும்பாபிஷேகத்திற்கு பிறகு அனைத்து வித பூஜைகளும் செய்யப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை இதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: