வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

அமைச்சர் உதயநிதி தலைமையில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் -ஊரகம், இசேவை சான்றிதழ்கள், பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, சாலை விபத்துக்களுக்கான நிவாரணம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், குடிநீர் விநியோகம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், 15-வது ஒன்றிய நிதி குழு - பணி முன்னேற்றம், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பாலின விகிதம், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள், தாய்மார்கள் இறப்பு, குழந்தைகள் இறப்பு விகிதம், இளம் வயதில் கர்ப்பமடைதல், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மைக் காக்கும் -48, RBSK திட்டத்தின் கீழ் 7 முக்கிய அறுவை சிகிச்சைகளின் செயல்திறன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் அங்கன்வாடி உட்கட்டமைப்பு, புதுமைப் பெண் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் உழவர் சந்தைகளின் செயல்பாடுகள், உழவர் உற்பத்தியாளர்கள் குழு செயல்பாடுகள், ஆவின் கூட்டுறவு சங்கங்களின் செயல் திறன், சினை பரிசோதனைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதிகள், தாட்கோ, அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சாலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உடனடியாகவும், விரைவாகவும் சென்றடையும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், ஈரோடு மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), சரஸ்வதி (மொடக்குறிச்சி), மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அஹமத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் நாரணாவாரே மனிஷ் சங்கர்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, துணைத் தலைவர் கஸ்தூரி உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: