அகில இந்திய கராத்தே போட்டியில் பள்ளிபாளையம் கராத்தே மாணவி கோகிலாசெல்வராஜ் முதல்பரிசு தங்ககோப்பையும் சேலம் மாவட்டம் ஆத்தூர் திலகவதிஉதயகுமார் தங்ககோப்பையை வென்று சாதனை படைத்தனர்.
கோவை : கணபதி கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 17 வது ஆசியன் கராத்தே அகாடமி நடத்திய இன்டர்நேஷனல் மெய்புகான்கோஜுரியு நேஷனல் கராத்தே போட்டி நடைபெற்றது
இதில் மகாராஷ்டிரா தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, மற்றும் பல மாநிலங்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றார்கள், கட்டா குமித்தே ,டீம் கட்டா ,
டீம் குமித்தே,ஓபன் கட்டா ஓபன் குமித்தே ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
அந்த போட்டிகளில் நாமக்கல் சேலம் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த இன்டர்நேஷனல் மெய்புகான் கோஜுரியு கராத்தே பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நாமக்கல் ஈரோடு சேலம் மாவட்ட கராத்தே பயிற்சியாளர்கள்
சென்செய் கோபால்.
சென்செய் மணிவர்மா .
சென்செய் நிவாஸ்
சென்செய் உதயகுமார் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டு,
10 முதல்பரிசுகள்,
13 இரண்டாம்பரிசுகள்
25 மூன்றாம்பரிசுகள் கோப்பைகளாக
பெற்று பெருமை சேர்த்து உள்ளார்கள்
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மும்பையைச் சேர்ந்த யூனியன் கோஜுரியு பெடரேஷன் தலைவர் தீரஜ் பவார், ஜீத்தோ கு காய் அகில இந்திய செயலாளர் சென்சாய் முத்துராஜு கோவை மாவட்ட கராத்தே சங்க தலைவர் VMC மனோகர்
தமிழ்நாடு ட்ரெடிஷனல் அண்ட் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர்
திருச்சி செழியன்,
கர்நாடகா மாநில கராத்தே ஆசிரியர்கள் சென்செய் காஷ்யப்
கியோஷி சசிதரன்,
ஷிஹான் பார்த்திபன்
ஷிஹான் முத்தையா
டெக்னிக்கல் டைரக்டர்
கராத்தே பேராசிரியர்
ஷிஹான் K.R.மாணிக்கவாசகம்,ஆகியோர் முன்னிலையில்
35 வயதுக்குட்பட்டவர்களுக்கான கலர்பெல்ட் கட்டா பிரிவில் முதலிடம் பெற்ற பள்ளிப்பாளையம் ஆவரங்காடு பகுதியைச்சேர்ந்த கோகிலா செல்வராஜ் மற்றும் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த திலகவதி உதயகுமார் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கான கலர்பெல்ட் கட்டா பிரிவில் முதல்பரிசு தங்ககோப்பையை வென்றெடுத்தார்கள், அந்த வீராங்கனைகளுக்கு வெற்றி கோப்பைகளை சிறப்பு விருந்தினர்களும் முக்கிய பிரமுகர்களும் சேர்ந்து வழங்கினார்கள்
வரலாற்றில் முக்கியத்துவம் நிறைந்த கராத்தே போட்டி இது என்று கராத்தே ஆர்வலர்களும் பொதுமக்களும் கோகிலா + திலகவதி போன்ற
குடும்ப தலைவிகள் கராத்தே உலகில் அடியெடுத்து வைத்திருப்பது ஆரோக்யமான பெருமைக்குரிய விஷயம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்
0 coment rios: