ஈரோடு ஜீவானந்தநகர் கள்ளுக்கடை மேடு பகுதில் உள்ள அருள்மிகு கொண்டத்து பத்ரகாளியம்மன்
ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு ஆலயத்தின் சிவாச்சாரியார் பிரத்யேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாகசாலையில் பக்தர்கள் வழங்கிய பல்வேறு பொருட்களால் சிறப்பு யாகம் நடைபெற்றது.
பின்னர் மேளதாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட கலசத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தை தலையில் சுமந்தவாறு, நான்கு கால பூஜைகள் யாக வேள்விகள் செய்து பூஜிக்கப்பட்ட கும்பத்திற்கு புனித தீர்த்தத்தை ஊற்றினார்.
தொடர்ந்து கும்பத்திற்கு சந்தனப் பொட்டிட்டு பட்டாடை உடுத்தி வண்ண மாலை அணிவித்த பிறகு மகா தீபாராதனையும் காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது,
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்,தொடர்ந்து ஆலயத்திற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.
0 coment rios: