சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
நிலத்தரகு தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், சேலத்தில் நடைபெற்ற தமிழக நில தரகர்கள் நலச் சங்கத்தின் மகாசபை கூட்டத்தில் தீர்மானம்.....
தமிழக நிலத் தரகர்கள் நல சங்கத்தின் மகாசபை கூட்டம் சேலம் தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. தமிழக நிலத்தரகர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த மகா சபை கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவரும் கட்டுமான மனை கூட்டமைப்பு தலைவருமான பொன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அந்த சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் நிலத்தரகர்களின் நலன் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்திற்கான வரவு செலவு கணக்குகள் குறித்து ஒப்பு வைக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக பத்திர பதிவுத்துறையில் பிரதானமாக வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாமல் ஏழை எளிய பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நில வழிகாட்டி மதிப்பு அவ்வப்போது உயர்த்துவதை அரசு தடுக்க வேண்டும் என்றும் நிலத்தரகு தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் மற்றும் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவினை கடந்த 6.4.2016 அன்று சென்னை அறிவாலயத்தில் தற்போதைய தமிழக முதல்வராக இருக்கும் போற்றுதலுக்குரிய மு க ஸ்டாலின் அவர்களிடம் வழங்கிய போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார் மேற்கண்ட கோரிக்கைகளை பரிசளித்து நிறைவேற்றி தருமாறு இந்த சங்கம் தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நில தரகு செய்யும் தொழிலாளர்களின் நலனை காக்கும் விதமாகவும் அவர்களை பாதுகாக்கும் விதமாகவும் நிலத்தரகு செய்யும் தொழிலாளர்களை அமைப்பு சாரா தொழிலாளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்று தரும் என்று நம்புவதாகவும் இதற்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் பொன்குமார் தெரிவித்தார்.
இதற்கு தங்களது நீண்ட நெடிய கோரிக்கையான அமைப்பு சாரா தொழிலாளர் பட்டியலில் நிலத்தரகர்களின் இணைக்க வேண்டும் என்ற முதன்மை கோரிக்கையினை பொன் குமார் அவர்கள் நிறைவேற்ற முனைப்புடன் பாடுபடுவேன் என்று தெரிவித்து சென்றது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக அந்த சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாதுரை தெரிவித்தார்.
இந்த மகா சபை கூட்டத்தில் தமிழக நில தரவர்கள் நல சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான வரதராஜன் நமச்சிவாயம் நடராஜன் கணேசன், சிவகணேசன் ஜபருல்லா ஈரோடு புருஷோத்தமன் தர்மபுரி ராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: