சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தேமுதிக தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா... சேலம் கிழக்கு மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடிகளை ஏற்றி ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தேமுதிகவினர் உற்சாகம்...
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான காலம் சென்ற கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா இயன்றதை உதவுவோம் இயலாதவர்களுக்கு என்ற தாரக மந்திரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய சேலத்தில் சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா ஏழை எளியவர்களுக்கு நல உதவிகள் வழங்கி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இதன் ஒரு பகுதியாக சேலத்தை அடுத்துள்ள மஜ்ரா கொல்லப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேமுதிக ஒன்றிய செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளரும், தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினருமான ஏ.ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டு கட்சிக் கொடியினை ஏற்றி ஏற்றி வைத்து, பல்வேறு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து கிழக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன் மறைந்த விஜயகாந்த்திற்கு புகழாரம் சூட்டி சிறப்புரையாற்றினார்.
இதனை அடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதே போல அயோத்தியாபட்டணம் வெளியிருந்த ஒரு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடைகளும் காலை உணவு வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து எருமை பாளையம் வாழப்பாடி ஆத்தூர் செந்தாரப்பட்டி தம்மம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடிகளை ஏற்றி வைத்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அன்னதானமும் வழங்கப்பட்டது. இதுபோக இன்று மாலை சின்ன சேலத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அவை தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் பழனிசாமி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் சுந்தர், புவனா செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தங்கம், ஒன்றிய பொருளாளர் கார்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரமிளா அன்பழகன், மகேஸ்வரி, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், செல்வம் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: