சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அதிகாரிபட்டி ஊராட்சியை சேலம் மாநகராட்சி உடன் இணைப்பதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம். தவறும் பட்சத்தில் மத்திய மாநில அரசுகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஆசிரியரும் திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை.
ஊர் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசிய போராட்டத்திற்கு, ஊர் பொதுமக்கள் சார்பாக சத்யா தலைமை தாங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அதிகாரி பற்றி ஊராட்சி மிகவும் பின்தங்கிய ஊராட்சி என்றும் சுமார் 1600 குடும்பங்கள் உள்ளது. இதில் 1238 பெண்கள் ஊரக வேலை திட்டத்தில் பணி செய்து வருகின்றனர் இன்னும் இந்த பகுதி மக்கள் நிலையான வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர் மாநகர் மக்கள் போல தங்களது பகுதி மக்கள் வாழ போதிய பொருளாதார வசதி இல்லை இந்த ஊராட்சியை மாநகரத்துடன் இணைத்தால் இங்குள்ள தொழிற்சாலைகள் வெளியேறும் மேலும் இங்குள்ள ஆண்கள் தொழிற்சாலையில் பணி செய்யும் வேலை பறிபோகும். அதுமட்டுமில்லாமல் மாநகரத்துடன் இணைத்தால் தங்களது வாழ்க்கை தரும் மேம்பட போவதும் இல்லை. இதுபோன்று ஏராளமான பிரச்சனைகள் உள்ள இந்த ஊராட்சியில் தற்பொழுது சுகாதாரம் குடிநீர் தெரு விளக்கு கழிப்பறை வசதிகள் ஏதும் இல்லை. மாநகரத்துடன் இணைத்தால் தங்களது சூழ்நிலை மேலும் மோசமாக மாறிவிடும்.
இதுபோன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகள் நிறைய உள்ள நிலையில்தான் தங்களது பகுதியை மாநகரத்துடன் இணைக்க வேண்டாம் என்று இந்த போராட்டத்தில் வாயிலாக நாங்கள் தெரிவிக்கிறோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கையை ஏற்க மறுத்து மாநகரத்துடன் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு வழங்கிய ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை ஆகியவற்றை தமிழக அரசிடம் திருப்பு ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விறுத்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருமா சுந்தரம், ரமேஷ் முரளிதரன் உட்பட கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: