ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு இன்று ஈரோடு மாவட்ட செவித்திறன் குறையுடையோருக்கான நலச் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட செவித்திறன் குறையுடையோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செவித்திறன் குறை உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான சைகை மொழி,மொழிபெயர்ப்பாளர் பணி நியமம் செய்ய வேண்டும், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நிபந்தனை தளர்த்தி கடன் வழங்க அறிவுறுத்த வேண்டும், கிருஷ்ணகிரி,நாமக்கல்,தூத்துக்குடி சென்னை,மதுரை, சேலம் போன்ற தமிழகத்தின் பிற மாவட்டங்களில் செவிதிறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் வழங்குவது போல ஈரோடு மாவட்டத்திலும் ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும்,ஈரோடு மாவட்டத்தில் சொந்த வீடு மற்றும் நிலம் இல்லாத செவித்திறன் குறைவு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற அனுமதிக்க வேண்டும்.
கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளியாக இருந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளின் குறைகளை கண்டறிந்து அக்குறையை உடனடியாக தீர்க்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீண்ட வருடங்களாக தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை வலியுறுத்தி வரும் நிலையில் இதற்கான தீர்வு கிடைக்காததால் தற்போது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருப்பதாக செவி திறன் குறையுடையோர் நலச் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
0 coment rios: