செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

தாழ்த்தப்பட்ட நபரின் இறைச்சிக் கடையை முன் அனுமதியின்றி அடித்து நொறுக்கிய அரசுத்துறை அலுவலர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிகார துஷ் பிரயோகம் செய்த வாழப்பாடி பேரூராட்சி அரசு அதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ???????????

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

வேலியே பயிரை மேயும் கதை. சேலம் வாழப்பாடியில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த நபரின் இறைச்சி கடையை அடித்து நொறுக்கிய E.O கணேசன் என்பவர். E.O. க்கு லஞ்சம் தர மறுத்ததால் காவல்துறையினர் ஒத்துழைப்புடன் அட்டூழியம்........

சேலம் மாவட்டம் வாழப்பாடி அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் வினோத். இவர் அதே பகுதியில் வாழப்பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் இறைச்சி கடையை நடத்தி வருகிறார். அதே பகுதியில் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கடைகளும் இயங்கி வருகின்றன. சேலம் மாவட்டம் வாழப்பாடி E.O. கணேசன் என்பவர் கால் புணர்ச்சியின் காரணமாக மேற்கண்ட சமுதாயத்தை சார்ந்தவர் தொடர்ந்து இறைச்சிக்கடை நடத்தக் கூடாது என்பதற்காக பொய்யான புகார் மனு என்பதை வைத்துக்கொண்டு நேற்று மாலை எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் காவல்துறை பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட இறைச்சி கடைக்கு சென்று அவர் தனது அதிகாரத்தை பிரயோகம் செய்து கடையை அடித்து நொறுக்கி உள்ளார். 
ஒரு அரசு அலுவலருக்கு கடையை காலி செய்ய சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்க வேண்டும் அல்லது ஜப்தி செய்ய வேண்டும் இது அரசு விதிமுறை
அரசு அதிகாரத்தை யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் சம்மந்தப்பட்ட E.O. கணேசன் மேற்கொண்ட இந்த சம்பவம் வாழப்பாடி மட்டுமல்ல சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முறையாக பாதுகாப்பு வழங்க வேண்டிய சேலம் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் அரசு விதிமுறைகளை எல்லாம் காட்டில் பறக்க வைத்து விட்டு யாரோ ஒருவர் தூண்டுதலின் பேரில் E.O. கணேசன் என்பவர் அங்குள்ள மற்ற கடைகளுக்கெல்லாம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சம்பந்தப்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த வினோத் என்பவரது இறைச்சி கடைக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை பாதுகாப்புடன் தடையை அகற்றி உள்ளார் அதாவது துவம்சம் செய்துள்ளார்..
இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பின் மாநில துணை செயலாளரும், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவி, நம்முடைய கூறுகையில், இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த சம்பவம் தொடர்பாக சேலம் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சம்பந்தப்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த வினோத் என்பவர் அதே பகுதியில் தொடர்ந்து இறைச்சி கடை நடத்த பேரூராட்சி நிர்வாகம் பாதுகாப்பு வழங்க வேண்டும் மற்றும் அடித்து நொறுக்கப்பட்ட பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த வினோத் என்பவரின் இறைச்சி கடைக்கு உண்டான நஷ்ட ஈடை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனை வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் ஏற்க தவறும் பட்சத்திலும் அல்லது வழங்க மறுக்கும் பட்சத்திலும் கூடிய விரைவில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த அத்தனை நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் போராட்டம் விரைவில் வாழப்பாடியில் நடக்கும் என்றும் அதுவும் பேரூராட்சி நிர்வாக அலுவலகத்திற்கு முன்பாகவே நடக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சரஸ்ராம் ரவி.
உடன் பாதிக்கப்பட்டவர் உட்பட அமைப்புகளின் சட்ட ஆலோசகர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் என பலரும் உடன் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: