சேலம்,
S.K.சுரேஷ்பாபு.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சேலம் மாநகரில் இந்து முன்னணி சார்பில் 115 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து விசேஷ வழிபாடு.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் 7ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் இந்து முன்னணி சார்பில் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள எல்லை பிடாரி மாரியம்மன் கோவில் அருகே இந்து முன்னணி அமைப்பின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதனை அடுத்து பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்து முன்னணி அமைப்பின் சார்பில், சேலம் மாநகரில் 115 இடங்களிலும் இதேபோல மாவட்டம் முழுவதும் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட உள்ளதாக இந்து முன்னணி அமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு பூஜையில் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: