சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவையொட்டி ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.
கர்மவீரர், பெருந்தலைவர், பாரதரத்னா, கல்விக் கடவுள் என்று அழைக்கப்படும் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் நடைபெற்றது. காமராஜர் இளைஞர் பேரவை மற்றும் பாரதீயம் நண்பர்கள் குழு சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு அமைப்புகளின் நிர்வாகிகள் கௌதமன் ராஜா சுகுமார் மற்றும் சபரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் எழுத்தாளர் அங்கதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கவிதை, பாட்டு, பேச்சு மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் ஆயிரம் பேருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் விழாவை இணைந்து நடத்திய அமைப்புகளின் சார்பில் சிறப்பு விருந்தினர் வழங்கி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த விழாவில் வழக்கறிஞர்கள் சீனிவாசன் பன்னீர்செல்வம் உட்பட அருணாசலம் தர்மலிங்கம் ஜெகதீசன் மற்றும் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: