சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த நாளை ஒட்டி சேலத்தில் மாநில அளவிலான ஓவியம் மற்றும் கையெழுத்துப் போட்டிகள்.
தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி சேலம் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் சார்பாக அழகோவியம் 2024 என்ற தலைப்பில் சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியானது சேலம் சங்கர் நகர் பகுதியில் உள்ள அண்ணா நூலக கட்டிட மாடியில் நடைபெற்றது. நம்பிக்கை வாசல் டிரஸ்டின் தலைவர் கவிஞர் ஏகலைவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் சேலம் மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் ப்ரீகேஜி, எல் கே ஜி மற்றும் யுகேஜி குழந்தைகளுக்கு பூக்கள் மற்றும் இயற்கை என்ற தலைப்பிலும், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு தேசியக்கொடி தேசிய விலங்கு என்ற தலைப்பிலும், நான்கு ஐந்து ஆறு ஆகிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரமும் மனிதமும் என்ற தலைப்பிலும் மற்றும் ஏழு எட்டு ஒன்பது ஆகிய வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இந்திய வரலாற்று சின்னங்கள் என்ற தலைப்பில் ஓவியப்போட்டிகளும் கையெழுத்துப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழர்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன என்றும் இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் அடுத்த கட்டமான போட்டிகளில் பங்கேற்க தேவையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் ஏகலைவன் தெரிவித்தார். இந்த மாநில அளவிலான போட்டிக்கான ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் மோகன் ஷங்கர் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: