செவ்வாய், 24 செப்டம்பர், 2024

சேலம் எடப்பாடி வெள்ள கவுண்டனூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மதிப்பிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோவிலுக்கு சுவாதீனம் செய்யப்பட்டது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் எடப்பாடி வெள்ள கவுண்டனூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மதிப்பிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோவிலுக்கு சுவாதீனம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் மொரசம்பட்டி வெள்ள கவுண்டனூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான வெள்ளரி வெள்ளி கிராமம் சர்வே எண் 104/1, புஞ்சை பரப்பு - 2.18.50. 104/2 புஞ்சை பரப்பு 0.18.00, சர்வே எண் 281/1 பரப்பு 1.39.00 மொத்த பரப்பு 9.27 ஏக்கர் கொண்ட நிலங்கள் மற்றும் அந்நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் 12675 சதுர அடி ஆகியவைகள் சேலம் இணை ஆணையர் நீதிமன்ற பலவகை மனு எண் 09/2017 மற்றும் 10/2017.மற்றும் உயர் நீதிமன்ற ரிட் மனு 1390/2019 உத்தரவுகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
சேலம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு கே ராஜா அவர்களால் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் திரு பாலாஜி எடப்பாடி காவல் ஆய்வாளர் திருமதி எஸ் பேபி சரக ஆய்வாளர் திருமதி ஜோதிலட்சுமி பரம்பரை அறங்காவலர்கள் திரு ஜே கிரிதரன் திரு ரவிச்சந்திரன் மற்றும் இத்துறை அலுவலர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுவாதீனம் பெறப்பட்டது இதன் தற்கால சந்தை மதிப்பு தோராயமாக ரூபாய் 15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: