ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை இன்று (24ம் தேதி) நடத்தியது.
இந்த முகாமில் 14க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்களும், 5 திறன் பயிற்சி மையங்களும் பங்கேற்றன. 100-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற இம்முகாமில் 135 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டதில், 40 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு பெற்றதற்கான சான்று வழங்கப்பட்டது. மேலும், இம்முகாமில் இலவச திறன் பயிற்சி பதிவு, சுயதொழில் செய்வதற்கான இலவச வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
இம்முகாமில், உதவி இயக்குநர் (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) ராதிகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: