இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் முழுவதும் சாலை சேவை கட்டணம் என்ற போர்வையில் வழிப்பறி கொள்ளை நடத்திக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டம் வருகின்ற செப்டம்பர் 16ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
அதில் ஒரு பகுதியாக, அன்றைய தினம் பிற்பகல் 3:00 மணியளவில் கொங்கு மண்டலத்தில் கோவை கருமத்தம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர் ஹாஜியார் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், மமக நிர்வாகிகள், தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு என்று தெரிவித்துள்ளார்.
0 coment rios: