திங்கள், 9 செப்டம்பர், 2024

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் முழுமையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தான் அரசின் கடமை என சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் முழுமையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுதான் அரசின் கடமை என சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.

சேலம் ரெட்டியூர் நரசோதிபட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி கோவில் மற்றும் ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் மற்றும் ராஜ கணபதி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். 

இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் முழுமையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுதான் அரசின் கடமை என்றார். பரந்தூர் விமான நிலைய  பணிகள் துவங்கி விட்டது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்று கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். ஒரு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக   தீர்வு காண வேண்டும் என்றார்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சரியாக கவனிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நாங்கள் சுட்டிக் காட்டியும் குறைகளை ஆய்வு செய்து சரி செய்வதை விட்டுவிட்டு, எனக்கு எதிராக குறை சொல்லி வருகிறார்கள் என்ற அவர்,  செஞ்சி ராமச்சந்திரன் அ.தி.மு.கவிலிருந்து த.வெ.க விற்கு செல்கிறார் என கூறப்படுகிறது என்ற கேள்விக்கு. அவர் சொன்னாரா? இது வதந்தி. அதிமுக மிகப்பெரிய கடல், ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக என்று தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: