ஈரோடு மாவட்டத்தில் போலீசார் விருப்ப பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி, 17 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 32 தலைமை காவலர்கள் மற்றும் முதல்நிலை காவலர்கள் உள்பட மொத்தம் 74 போலீசாரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டு உள்ளார்.
ஈரோடு சூரம்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், ஆசனூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் சத்தியமங்கலம் கண்காணிப்பு கேமரா அறைக்கும், தாளவாடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரமோகன் பவானிசாகர் காவல் நிலையத்துக்கும், கருங்கல்பாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நாராயணசாமி ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல், அறச்சலூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குப்புசாமி மலையம்பாளையம் காவல் நிலையத்துக்கும், தாளவாடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகன் பர்கூர் காவல் நிலையத்துக்கும், ஈரோடு நகர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் மோகன்ராஜ், செந்தில்குமார் ஆகியோர் மலையம்பாளையம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல், ஈரோடு தாலுகா சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜகாங்கீர் பாஷா ஈரோடு வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்துக்கும், கருங்கல்பாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்துக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமார் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலையத்துக்கும், பவானிசாகர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூர்ணசந்திரா சித்தோடு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், கவுந்தப்பாடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூபாலசிங்கம் பர்கூர் காவல் நிலையத்துக்கும், ஈரோடு சூரம்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கணேசன் மொடக்குறிச்சி காவல் நிலையத்துக்கும், ஈரோடு தாலுகா சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தனலட்சுமி ஈரோடு மகளிர் காவல் நிலையத்துக்கும், ஈரோடு சூரம்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அம்பிகா சிவகிரி காவல் நிலையத்துக்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல், மாவட்டத்தில் 32 தலைமைக் காவலர்கள் மற்றும் முதல்நிலை காவலர்கள் உள்பட மொத்தம் 74 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
0 coment rios: