சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தொட்டியில் தேங்கி கிடக்கும் புழுக்கள். சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஊர் பொதுமக்கள் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி அரசு துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் சரஸ்ராம் ரவி, சேலம் மாவட்ட ஆட்சியர், உதவி இயக்குநர் பஞ்சாயத்து, சேலம் வட்டார வளர்ச்சி அதிகாரி- மற்றும் கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஆகியோரின் கவனத்திற்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சேலம் மாவட்டம்- கொண்டப்பநாயக்கன் பஞ்சாயத்துக்குட்பட்ட- டெலிபோன் காலனி, சக்திநகர் பகுதி பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில்
புழக்கள் அதிக அளவில் உள்ளதாலும், மிதந்து வருவதாலும் குடிப்பதற்கு தகுதியற்ற, சுகாதாரமற்ற குடிநீராக உள்ளது என்றும், இந்த அசுத்தமான குடிநீரின் காரணமாக நோய் கிருமிகள் ஏற்படும் நிலையில் உள்ளதாகவும் கூறி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது சம்பந்தமாக வார்டு உறுப்பினர் சரவணன் பல முறை பஞ்சாயத்தில் எடுத்துரைத்தும் நடவடிக்கை எடுக்காத கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சுகாதாரமற்ற குடிநீர் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு பல்வேறு வியாதிகளும் நோய் தொற்றுகளும் ஏற்பட்டு வருவதாகவும் வருத்தம் தெரிவித்த சரஸ்ராம் ரவி பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் பொதுமக்கள் சார்பாக தெரிவித்துள்ளார்.
0 coment rios: