சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
புரட்டாசி 2-வது சனிக்கிழமை. சேலம் பெரிய புதூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆசிரமத்தில் மூலவருக்கு 100 கிலோ பழ வகைகளால் சிறப்பு அலங்காரம்.
தமிழ் மாதங்களில் வரும் புரட்டாசி மாதம் திருவேங்கடமுடையானுக்கு உகந்த மாதம் ஆக கருதப்படுகிறது. இதனை ஒட்டி தமிழ் மாதங்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமை ஆனது இன்று சேலம் அருகே உள்ள பெரிய புதூர் ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி இரண்டாம் வார சிறப்பு பூஜைகள் பக்த கோடிகள் ஆசீர்வாதத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
2-வது சனிக்கிழமையை ஒட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் உற்சவருக்கு மங்களப் பொருட்களைக் கொண்டு அதிகாலை முதலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூலவருக்கு சுமார் 100 கிலோ பழ வகைகளால் சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
இந்த புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை சிறப்பு பூஜையில் பெரிய புதூர் சின்ன புதூர் அழகாபுரம் நான்கு ரோடு 5 ரோடு உள்ளிட்ட சேலம் மாநகரின் முக்கிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
சேலம் பெரிய புதூர் ஸ்ரீ பாலாஜி டிரஸ்ட் வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது சனிவார பூஜையில் டிரஸ்ட் நிர்வாகிகள், சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: