சனி, 28 செப்டம்பர், 2024

தமிழக முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளின்படி புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்திட தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் முப்பெரும் விழாவில் நிறைவேற்றம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளின்படி புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்திட தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் முப்பெரும் விழாவில் நிறைவேற்றம். 

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் அங்கீகார நூற்றாண்டு விழா, சேலம் மாவட்ட மாநாடு மற்றும் பணி நிறைவு பெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் மாநில துணைத்தலைவர் இராஜேந்திரன் மற்றும் மாநில பிரச்சார செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 
மாநில தலைவர் அமிர்த குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த முப்பெரும் விழாவில் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை போன்று புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்வது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் அறிவிப்பு செய்து வழங்கப்பட்டு வந்த சரன் விடுப்பினை மீண்டும் வழங்கிட வேண்டுமாய் முதலமைச்சர். அவர்களையும் தமிழக அரசையும் கேட்டுக் கொள்வது மற்றும் தமிழக அரசு அலுவலர்களுக்கு வழங்கிய ஏழாவது ஊதிய குழுவின் நிர்ணயத்தில் நிலுவையில் உள்ள 21 மாத ஊதிய நிலுவையினை தமிழக முதலமைச்சர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 
இந்த முப்பெரும் விழாவில் அரசு அலுவலர்களின் கோரிக்கைகள் மட்டுமல்லாமல் சேலம் ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் சுங்கச்சாவடி வசூல் மையம் அவசியம் இன்றி அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் பொதுமக்களும் உள்ளிட்ட அனைவரும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர் எனவே இந்த சுங்கச்சாவடி வசூல் மையத்தினை ரத்து செய்து தர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாகவும், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில் அதிக மழை பொழிவு காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் அதிகப்படியான உபரி நீர் கடலில் சென்று கலக்கிறது இந்த உபரி நீரை சேலம் மாவட்டம் முழுமையையும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக முதல் அமைச்சர் திட்டம் வகுக்க வேண்டும் என்பன போன்ற பொதுப் பிரச்சினைகளும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பணி நிறைவு பெற்ற சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன் சௌந்தரராஜன் மற்றும் பரமசிவம் உள்ளிட்டோருக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றன.
இந்த முப்பெரும் விழாவில் சேலம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட பொருளாளர் ஜெயசங்கர் உட்பட மாநில மற்றும் மாநில நிர்வாகிகள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: