சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சோனா கல்வி நிறுவனத்தில்
சோனா கிரிக்கெட் அகாடமி சார்பில் நடைப்பெற்ற நிகழ்வில் நடிகர் மற்றும்
கிரிக்கெட் வீரர்ரான பாஸ்கி மாணவர்களிடையே சிறப்பு கலந்துரையாடல்
சேலம் சோனா கல்வி குழுமத்தில் சோனா கிரிக்கெட் அகாடமி சார்பில் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி கல்லூரியில் நடைப்பெற்றது. சோனா கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகருமான திரு.பாஸ்கி, தேசிய அளவிலான கிரிக்கெட் பயிற்சியாளர் திரு.அரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
சிறப்பு விருந்தினர் திரு.பாஸ்கி பேசும் பொழுது இன்றைய சூழலில் மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் விளையாட்டினால் உடல் வலிமையுடன் மனவலிமையும் அடைய முடியும். இன்றைய வாழ்க்கை சூழலில் இது முக்கியமான ஒன்றாகும் என்றார்.
மேலும் பல துறைகளில் சிறந்து விளங்கிவரும் சோனா கல்வி நிறுவனங்கள் தற்போது விளையாட்டு துறையிலும் சிறப்பாக செயல்பட ஒரு புதிய முயற்சியாக அதிநவீன வசதிகளுடன் கூடிய சோனா கிரிகெட் அகடமியை துவங்கியுள்ளது சேலத்திற்கு மிக பெரிய அடையாளம் என்றார். இந்த புதிய முயற்சியை செயல்படுத்திய சோனா கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகுவள்ளியப்பாவை அவர் வெகுவாக பாராட்டினார்.
இதனைத்தொடர்ந்து சோனா கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகுவள்ளியப்பா பேசும்பொழுது சிறந்த உள் கட்டமைப்பு, நல்ல பேராசிரியர்கள், மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்கிவருகிறது. தற்போது விளையாட்டு துறையிலும் சர்வதேச அளவில் சிறப்பு பெற அதிநவின வசதிகளுடன் கூடிய சோனா கிரிகெட் அகடமியை துவங்கியுள்ளது. விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்பினை முழுமையாக பயன்படுத்தி விளையாட்டு வீரர்களாக அவர்கள் உருவாகவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். மற்றும் விளையாட்டு மூலம் தான் உடல் வலிமையும், மன வலிமையும் பெற்று மாணவர்கள் வாழ்கையில் வெற்றியடைய முடியும் என்றார்.
இந்த நிகழ்வில் சோனா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், ஜி.எம்.காதர்நவாஷ், இ.ஜெ.கவிதா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: