ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி வழங்கிடும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் ரங்கம்பாளையம், டாக்டர் . ஆர்ஏஎன்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து இளைஞர்களும் (ஆண், பெண் இருபாலரும்) கலந்துகொண்டு பயன்பெறலாம். இதர விவரங்கள் குறித்து அறிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, முதல் தளம்,பூமாலை வணிக வளாகம், குமலன் குட்டை,பெருந்துறை சாலை, ஈரோடு - 638011 என்ற முகவரியிலும், 94440 94274 என்ற கைப்பேசி எண்ணிலும், dpiu_erod@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
0 coment rios: