ஒரே நாடு ஒரே தேர்தல் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு கொண்டு வரப்படுகிறது என்று ஈரோட்டில் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம் சாதிக் தாயார் சேதியா பேகம் நினைவேந்தல் கூட்டம் ஈரோடு விநாயகா கார்டனில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்,
இத
னைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு கொண்டு வரப்படுகிறது. இது அதிபர் ஆட்சிக்கு வழி வகுத்து விடும் என்பதால் ஏற்கனவே எங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம்.ஒருமித்த கருத்து உள்ள இயக்கங்களுடன் சேர்ந்து மேலும் வலுவாக குரல் கொடுப்போம். கோயில்களில் இருந்து இந்து அறநிலையைத் துறை வெளியேற வேண்டும் என்று பாஜக நீண்ட நாட்களாக தெரிவித்து வருகிறது. இந்துக்களின் நலனுக்காகவும் இந்து கோவில்களை நிர்வாகத்தை முறைப்படுத்துவதற்காகவும், கோவில்களுக்கு வரும் நிதி முறையாக செலவு செய்யப்படுவதற்காக கோயிலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
எனவே, இந்து சமூகத்திற்கு எதிரானது அல்ல. வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக கூறி வருகின்றனர். மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக பொதுவான அறை கூவல் அழைப்பு விடுத்தோம். இது பொதுவான மக்கள் கோரிக்கை தனிப்பட்ட முறையில் இதுவரை யாருக்கும் கடிதம் எழுதி அழைப்பு விடுக்கவில்லை.
கட்சியில் உயர் நிலையில் உள்ள முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசியதில் திமுக சார்பில் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டுக்கு அவர்களை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.
0 coment rios: