எனவே, ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் பின்வரும் கல்வி 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு, தொழிற்பயிற்சி கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை வரை படித்துள்ள நபர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 94999-33475 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் வரும் 24ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி மையத்துடன் இணைந்து சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 24ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அரங்கில் நடைபெற உள்ளது.
0 coment rios: