சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இந்திய இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் சேலம் லோக்கல் சென்டர் சார்பில், பொறியாளர்கள் தினத்தை ஒட்டி 60 நபர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி.
ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் தேதி பாரத ரத்னா ஸ்ரீ விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாள் விழா பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சேலத்தில் இந்திய இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் சேலம் லோக்கல் சென்டர் சார்பில் 57வது பொறியாளர் தினத்தை முன்னிட்டு சேலம் சிவில் இன்ஜினியர் அசோசியேஷனில் நடைபெற்ற விழாவிற்கு அந்த அமைப்பை சேர்ந்த தலைவர் டாக்டர் தங்கராஜ் மற்றும் செயலாளர் டாக்டர் திருமதி தவமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் தொழிலதிபர் ரவிச்சந்தர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை ஏற்றிவைத்தும் பாரத ரத்னா விஸ்வேஸ்வரய்யா அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியும் விழாவினை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் விழாவை நடத்திய அமைப்பின் சார்பில் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 60 சிறந்த பொறியாளர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த சங்கத்தின் தலைவர் தங்கராஜ் செய்தியாளரிடம் கூறுகையில் தமிழக அரசு பொறியாளர்கள் சமுதாயத்திற்கு பல்வேறு சலுகைகளும் நான் முதல்வன் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை வழங்கி உள்ளது என்றும் இந்த திட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளை நடத்த தாங்கள் தயாராக உள்ளதாகவும் இதற்கு தமிழக அரசு தங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
0 coment rios: