S.K. சுரேஷ் பாபு.
முதலமைச்சர் கோப்பைக்கான கோ-கோ போட்டியில் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டம். கேரம் போட்டியிலும் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து அரசு பள்ளி மாணவர்கள் சாதனை.
சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான கோ-கோ போட்டிகள் சூரமங்கலம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து 56 பள்ளிகள் கலந்து கொண்டு விளையாடினர். இறுதிப் போட்டியில் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும், கே.கே நகர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியது. இதில் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. மேலும் முதலமைச்சர் கோப்பைக்கான கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சர்வேஷ், நந்தா ஆகியோர் இரண்டாம் இடமும், 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தினேஷ்,தருண் ஆகியோர் மூன்றாம் இடமும் பிடித்தனர். தடகள போட்டியில் குண்டு எறிதலில் 12 ஆம் வகுப்பு மாணவன் தாமரைச்செல்வன் முதலிடமும், வட்டு எறிதலில் மூன்றாம் இடமும் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.ஒசூரில் நடைபெற்ற சேலம் மண்டல அளவிலான(சேலம், நாமக்கல்,தருமபுரி,கிருஷ்ணகிரி,ஓசூர்ஆகிய கல்வி மாவட்டம் ) SGFI கோ-கோ தெரிவுப்போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் கபிலன்,காசியப்பன், விக்ராந்த், 10 ஆம் வகுப்பு மாணவன் தீபக் , 8 ஆம் வகுப்பு மாணவன் நாகராஜ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டு மாநிலப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் அரசுப் பள்ளிகளில் அதிக வெற்றிகளை வலசையூர்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இப்பள்ளி 46 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தலைமையாசிரியர் ஜெயலேந்திரன் தலைமையேற்று நடத்தினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சி.பி வைத்திலிங்கம் வாழ்த்துரை வழங்கி பரிசளித்தார்.இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் யோகநாதன் , ஸ்டாலின், அன்பன் டேனியல், ஆசிரியர்கள் ரவி,மணமல்லி மற்றும் இருபால்ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
0 coment rios: