ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எலவமலை, கதிரம்பட்டி, கூரப்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், பிச்சாண்டாம்பாளையம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 46 புதூர், லக்காபுரம் ஆகிய 7 ஊராட்சிகள் ஈரோடு மாநகராட்சியோடு இணைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த 7 ஊராட்சிகள் இணைக்கப்படும் பட்சத்தில், மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 60ல் இருந்து 75ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதேபோல், பவானி நகராட்சியுடன் ஆண்டிக்குளம் மற்றும் குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிகளும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியுடன் லக்கம்பட்டி பேரூராட்சி, வெள்ளாளபாளையம், கலங்கியம், மொடச்சூர், பாரியூர், குள்ளம்பாளையம் ஆகிய ஐந்து ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளது.
இதேபோல், சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சியும், புஞ்சைப்புளியம்பட்டி நகராட்சியில் நொச்சிக்குட்டை, மாதம்பாளையம், நல்லூர் ஆகிய மூன்று ஊராட்சிகளும் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பெருந்துறை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
0 coment rios: