ஈரோட்டில் கூலி பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் விசைத்தறி தொழிலாளியை தலையில் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொத்துகார தோட்டம் பகுதியில் ஏராளமான விசைத்தறி பற்றையானது இயங்கி வருகிறது. அதே பகுதியில் நந்தகுமார் என்பவர் காமாட்சி அம்மன் டெக்ஸ் என்ற பெயரில் விசைத்தறி பட்டறை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பள்ளிபாளையத்தை சேர்ந்த தனியார் டெக்ஸ் (சிவன்) உரிமையாளர்களான குமார் மற்றும் அவரது மகன் விக்ரம் ஆகியோர் பாவு நூல்களை நெசவு செய்து தருவதற்காக நந்தகுமாரிடம் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்று மாத காலமாக நந்தகுமார், தனியார் டெக்ஸ் உரிமையாளர் ,குமார் மற்றும் விக்ரம் ஆகியோருக்கு பாவு நூல்களை பெற்று நெசவு செய்து தந்துள்ளார்.
இந்நிலையில் நெசவு செய்ததற்கான 25000 ரூபாய் கூலியை நந்தகுமார் உரிமையாளரிடம் கேட்டுள்ளார். ஆனால் உரிமையாளர் குமார் மற்றும் அவரது மகன் விக்ரம் ஆகிய இருவரும் நந்தகுமாரிடம் நீங்கள் தான் எங்களுக்கு பணம் தர வேண்டி பாக்கி உள்ளது என்று கூறியுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த நந்தகுமார் நான் இனிமேல் உங்களுக்கு நெசவு செய்து தரமாட்டேன் நீங்கள் கொடுத்த பாவு நூல்களை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதில் நந்தகுமார் மற்றும் விக்ரம் அவரது தந்தை குமார் ஆகிய இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் விக்ரம் மற்றும் அவரது தந்தை குமார் ஆட்களுடன் நந்தகுமாரின் விசைத்தறிப்பட்டறைக்கு சென்று மீதமுள்ள பாவு மற்றும் நூல் போன்ற பொருட்களை லோடு ஏத்தி உள்ளனர். பின்பு நெசவு செய்ததற்கான கூலியை நந்தகுமார் கேட்டுள்ளார், குமார் மற்றும் அவரது மகன் விக்ரம் நந்தகுமாரிடம் பணம் தர முடியாது என தகராறு ஈடுபட்டத்துடன் ஆபாசமாக பேசி,கொலை மிரட்டல் விடுத்ததாக நந்தகுமார் தரப்பில் கூறப்படுகிறது .
வாய் தகராறு ஒரு கட்டத்தில் கைகளப்பாக மாறி கையில் உள்ள கட்டையால் விக்ரம், நந்தகுமாரின் தலையில் பலமாக தாக்கி உள்ளார் இதில் நந்தகுமார் படுகாயம் அடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நந்தகுமாரை தாக்கும் காட்சியானது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கூலி பிரச்சனையால் விசைத்தறி தொழிலாளி நந்தகுமாரை கட்டையால் தலையில் பலமாக தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து நந்தகுமார் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 coment rios: