சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் வழக்கறிஞர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம். நீதிபதி துவக்கி வைத்த இந்த முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் பயன் பெற்றனர்.
சேலம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் சேரும் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும்
அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.
வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் செயலாளர் நரேஷ் பொருளாளர் அசோக் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக நீதிபதி திருமதி சுமதி அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்து தனது கண்களை பரிசோதித்து கொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற முகாமில், கண் பரிசோதனை, இசிஜி பரிசோதனை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் கண் தொடர்பான அத்தனை பரிசோதனைகளும் வழக்குரைஞர்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிறப்பு முகாமில் வழக்கறிஞர் ஐயப்பமணி உட்பட சேலம் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உட்பட வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: