வியாழன், 12 செப்டம்பர், 2024

சேலம் 10-வது கோட்டத்தில் மாநகரை சுத்தமாக வைத்திருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு கருவிருந்து கொடுத்து கௌரவித்த திமுக மாமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் தெய்வலிங்கம்.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் பொன்னம்மாபேட்டையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம். 10-வது கோட்ட துப்புரவு பணியாளர்கள் உட்பட ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் கருவிருந்து வழங்கிய அசத்திய மாமன்ற உறுப்பினர் கைவலிங்கம். 

சேலம் மத்திய மாவட்ட திமுகவின் பொன்னம்மாபேட்டை பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சேலம் பொன்னம்மாபேட்டை அருகே சீலாவரி ஏரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பொன்னம்மாபேட்டை பகுதி திமுக செயலாளரும், பத்தாவது கோட்டை திமுக மாமன்ற உறுப்பினருமான டைவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர். தொடர்பு நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மற்றும் புதுவை உட்பட 40 க்கு 40 ககும் வென்றதைப் போல விரைவில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மத்திய மாவட்டம் கிழக்கு மாவட்டம் மேற்கு மாவட்டம் என அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒன்றிணைந்து மூச்சுடன் பாடுபட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளையும் திமுக கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டன. 
இதனை அடுத்து சேலம் மாநகராட்சியை பொருத்தவரை 60 கோட்டங்களை உள்ளடக்கிய மாமன்ற உறுப்பினர்கள் இருந்த போலிதலுமே கூட பத்தாவது போட்ட மாமன்ற உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த தெய்வலிங்கம் எப்பொழுதும் சற்று வித்தியாசமானவரே. காரணம் இன்று நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பத்தாவது கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ஒப்பந்த பணியாளர்கள் உட்பட கூட்டத்தில் பங்கேற்ற சுமார் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தனது சொந்த செலவில் கருவிருந்து வழங்கி அசத்தியதோடு, பசியை போக்கிய உத்தமன் என்று ஒவ்வொரு தூய்மை பணியாளர்களாலும் பாராட்டுதல்களை பெற்றார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: