சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் நான்காம் ஆண்டு மாநில பேரவை கூட்டம்.. சேலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் தொடர்பான 41 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் நான்காம் ஆண்டு மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பேரவை கூட்டத்திற்கு மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் பரமேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேரவை கூட்டத்தில் வரவேற்பு குழு தலைவர் திருவேரங்கன் மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் பாஸ்கரன் மாநில பேரவையை துவக்கி வைத்து உரையாடினார். தமிழக முழுவதிலும் இருந்து 38 மாவட்டங்களிலிருந்தும் 266 மாநில பேரவை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையா மற்றும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பிருந்தா தேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கடந்த ஆண்டில் அதிக உறுப்பினர்களை சேர்த்து விழுப்புரம் சென்னை மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு கேடயம் அளித்து பாராட்டப்பட்டது ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் தொடர்பான 41 தீர்மானங்கள் இந்த பேரவை கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
0 coment rios: