வியாழன், 12 செப்டம்பர், 2024

கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெறவில்லை என்றால் டாஸ்மாக் கடைகளை இழுத்துப்பூட்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெறவில்லை என்றால் டாஸ்மாக் கடைகளை இழுத்துப்பூட்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்
விவசாயிகளின் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.