சேலம்.
S.K.சுரேஷ் பாபு
சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தலை வெட்டி முனியப்பனாக கருதப்படும், புத்தருக்கு காவல்துறை பாதுகாப்புடன் பௌர்ணமி தியானத்தில் ஈடுபட்ட சேலம் புத்தா டிரஸ்ட் அமைப்பினர். புத்தர் சிலை தான் என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அலட்சியப்படுத்தும் தொல்லியல் துறைக்கு சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி கடும் கண்டனம்.
சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே தலைவெட்டி முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது.
இந்தக் கோவிலில் உள்ளது முனியப்பன் சிலையா அல்லது புத்தரின் சிலையா என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் இந்தக் கோவிலில் உள்ளது புத்தருடையது தான் என்று இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் பௌர்ணமி நாளன்று புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் புத்தருடைய சன்னிதானத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.
அதன் அடிப்படையில், சேலம் புத்தா டிரஸ்ட் அமைப்பின் சார்பில் தலைவர் ராம்ஜி மற்றும் அவரது அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் பௌர்ணமி நாளான இன்று புத்தருக்கு மரியாதை செய்து தியானம் செய்ய தலைவெட்டி முனியப்பன் கோவிலுக்கு வந்தனர்.
சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி அவர்கள் தலைமையில் புத்தா டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள் அங்கிருந்த புத்தர் சிலைக்கு சிறப்பு தியானத்தில் ஈடுபட்டதோடு புத்தம் சரணம் கச்சாமி என்ற சரண கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
0 coment rios: