சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் வழக்கறிஞர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம். நீதிபதி துவக்கி வைத்த இந்த முகாமில் ஏராளமான வழக்கறிஞர்கள் பயன் பெற்றனர்.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கான இலவச கண் சிகிச்சை மற்றும் முழு உடல் பரிசோதனை முகாம் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும்
லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் இமயவரம்பன் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் செயலாளர் முருகன், மற்றும் பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி.சுமதி அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்து தனது கண்களை பரிசோதித்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற முகாமில், கண் பரிசோதனை, இசிஜி பரிசோதனை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் கண் தொடர்பான அத்தனை பரிசோதனைகளும் வழக்குரைஞர்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. இது போக சேலம் பாலி கிளினிக் சார்பில் பெண்களுக்கான அனைத்து பிரச்சனைகளுக்கும் உண்டான பொது மருத்துவ முகாமும் நடைபெற்றன.
0 coment rios: