சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு மின்.வாரியம், சேலம் மாவட்டத்தில் அதிகாரிகளின் SC/ ST ஊழியர்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்.
சேலம் மாவட்டம் முழவதும் TNEB ல் பணி புரியும் SC/ ST ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் & பணி பாதுகாப்பு இல்லை. SC/ ST ஊழியர்களை பழி வாங்கும் நோக்கத்தில் அதிகாரிகள் உள்ளனர். அதிகாரிகள் அன்றாடம் செய்யும் ஊழல்/அதிகார துஷ்பிரயோகம்/ வரைமுறை மீறல்கள். வீராணம் மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் AE சிவராமன் என்பவர் ஒரு ஊழியர் மீது விஜிலென்ஸ் புகாரை விசாரணை செய்ய மேல் அதிகாரி ரகசிய ஆணை கொடுத்தால் அதை வரன்முறைகளை கடந்து சம்பந்தபட்ட ஊழியரிடமே புகார் அளித்தவர் குறித்து தகவல் பெற மிரட்டுவது. கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் அளித்தவர் அந்த பகுதியில் இல்லை என அறிக்கை பெற்று வர சொல்லி அச்சுறுத்துவது என தமிழ்நாடு மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் SC / ST கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி தெரிவித்துள்ளார்.
மேலும், இதையெல்லாம் கவனிக்காத மேல் நிலை அதிகாரிகள், இத்தகைய நிலையை SC/ ST ஊழியர்கள் மீது பொய் புகார்களை ஏற்பாடு செய்து அதன் மூலம் SC/ ST ஊழியர்களை மிரட்டும் ஆபத்தான சூழ்நிலையை விசாரணைக்கு TNEB தலைமை நிலை அதிகாரிகளை வலியுறுத்த தேசீய தாழ்த்தபட்டோர் ஆணையம் சாஸ்திரிபவன் சென்னை முன் வர வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் TNEB சேலம் கண்காணிப்பு மேற் பொறியாளர் அலுவலகம் முன் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் எஸ்சி / எஸ்டி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 coment rios: