பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
ஈரோடு மண்டலத்தில் மகளிருக்கு கட்டணமில்லா பயண திட்டத்தில் நாளொன்றிக்கு 3 லட்சம் மகளிர் தினசரி கட்டணமின்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது விளம்பரத்திற்காக திட்டம் அல்ல. சிஎன்சி கல்லூரியை அரசிற்கு மாற்ற குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளாகியும் தற்போது அனுமதி வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
கல்லூரி அரசிற்கு மாற்றம் செய்யப்படும் பட்சத்தில் அங்கு மிகப்பெரிய நூலகம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நிறைவேற்றப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு டாஸ்மாக் கடையை தொடர்ந்து நடத்துவதில் எள்ளளவும் விருப்பமில்லை. என்றைக்காவது ஒரு நாள் மூடப்பட வேண்டும் என்பது தான் அவரின் எண்ணம்.
ஆனால், உடனடியாக மூடினால் எந்த நிலைமை ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும். எனவே, அப்படிப்பட்ட கடுமையாக சூழ்நிலையை நிதானமாக அணுக வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். நிச்சயமாக ஒரு காலத்தில் மக்களை மதுவில் இருந்து வெளியே கொண்டு வர கொண்டு வர டாஸ்மாக் கடைகள் குறைத்துக் கொண்டே வரும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கு முன்பாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, இங்குள்ள நிலைமையை ஆலோசித்து சூழ்நிலையை பார்த்துத் தான் நடவடிக்கை எடுக்க முடியும். விசிக கொள்கை ரீதியான முடிவிற்காக மாநாடு நடத்துகின்றார்கள். இதில் எந்த தவறு சொல்லமுடியாது. ஆனால் அரசாங்கத்தையோ முதல்வரையோ எதிர்த்து மாநாடு நடத்துகிறார்கள் என்பது அல்ல.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிமுகவை கூட்டணிக்கு அழைப்பு விடுத்தையடுத்து அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என பேச்சுக்கள் எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு, கல்யாணத்திற்கு அழைப்பு கொடுப்பதால் அனைவரும் ஒன்றாக இருப்பதாக அர்த்தம் இல்லை எதிரிக்கும் அழைப்பு கொடுக்கின்றனர்.
ஒரு அழைப்பு கொடுத்ததற்கே அதிமுகவினர் இப்படி ஆட்டம் போடுகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டிற்கு அ.தி.மு.க உள்பட பொது அழைப்பு விடுத்தது தவறில்லை. முதல்வர் வெளிநாடு சென்றிருந்தாலும் தமிழ்நாட்டை தினந்தோறும் கவனித்துக் கொண்டிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டை அரசியலாக்க முயல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 coment rios: