ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர், செல்லாத்தா பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (44). எழுமாத்தூரில் சரஸ்வதி ஆட்டோ கேர் என டூவீலர் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பள்ளிபாளையத்தில் இருந்து எழுமாத்தூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
வெண்டிபாளையம் மின் கதவணை அருகே சென்ற போது 30 வயது மதிக்கத்தக்க நபர் சாலையின் குறுக்கே நின்று பாலுசாமி மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின் அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி பாலுசாமி பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டார். பாலுசாமி கூச்சலிட்டதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு வந்தனர்.
இதைப் பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இது குறித்து பாலுசாமி மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வழிப்பறி தொடர்பாக வெண்டிபாளையம், பால தண்டாயுதம் வீதியைச் சேர்ந்த பூபதி என்கிற பிரபாகரனை (33) என்பவரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.
பிரபாகரன் மீது வழிப்பறி, அடிதடி என பல்வேறு போலீஸ் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது.
பின்னர் பிரபாகரனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0 coment rios: