காஸ்ட்ரோஎன்ட்ராலஜி மற்றும் அதிநவீன லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்கான ஆசியாவின் முதல் பிரத்தியேக டெரிசியரி ஹெல்த் கேர் மையமாக விளங்கும் ஜெம் மருத்துவமனை நேற்று ஈரோட்டில் அமைந்துள்ள அதன் புதிதாக மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தை திறந்தது.
நம்பர். 5. முத்து கருப்பன் தெரு, காந்தி நகர், ஈரோடு, தமிழ்நாடு 638009 என்ற முகவரியில் உள்ள இந்த புது மருத்துவமனையை ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.சி.பழனிவேலு நேற்று நடைபெற்ற நிகழ்வில் திறந்து வைத்தார்.
காஸ்ட்ரோ என்ட்ராலஜி மற்றும் அதிநவீன லேப்ராஸ்கோபிக்கான இந்தப் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பல நவீன வசதிகளை கொண்டது. ஜீரண மண்டல ஆரோகியம் சம்மந்தப்பட்ட அனைத்து மருத்துவப்பிரிவுகளிலும் ஒரு புதிய முத்திரையை பதிக்கும் வண்ணம் இம்மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.சி.பழனிவேலுவுடன் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.எஸ்.அசோகன், இயக்குநர்கள் டாக்டர்.பி.செந்தில்நாதன் மற்றும் டாக்டர்.பி.பிரவீன் ராஜ் மற்றும் எக்ஸ்சிகியூடிவ் இயக்குனர் பிரியா செந்தில்நாதன் அவர்களும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
ஜெம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அதன் முன்னோடி முயற்சிகளினால் பேரியாட்ரிக் ஹெபடோபிலியரி, அப்பர் ஜி.ஐ. கோலோரெக்டல் மற்றும் ஜி.ஐ. புற்றுநோய் அறுவை சிகிச்சை ஆகிய பிரிவுகளில் சப் ஸ்பெஷாலிட்டியை கொண்ட இந்தியாவின் ஒரே மையமாக உள்ளது.பின்னர் இதனுடன் சிறுநீரகவியல், கைனகாலஜி துறைகளும் சேர்க்கப்பட்டன.
இதுவரை 10,000 துக்கும் அதிகமான லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது ஜெம் மருத்துவமனை. அத்துடன் 36,000துக்கும் அதிகமான நபர்களுக்கு எண்டோஸ்கோப்பி சிகிச்சைகளை செய்துள்ளது. இந்நாள் வரை 75,000துக்கும் அதிகமான மக்களின் நல்வாழ்வுக்கு தேவைப்படும் சிகிச்சைகள் வழங்கி அவர்களின் வாழ்க்கையில் நல்லதொரு தாக்கத்தை ஜெம் மருத்துவமனை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புது மருத்துவமனையின் திறப்பு விழாவின் போது பேசிய ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு, நோயாளிகளை முன்னிலை படுத்தி வழங்கப்படும் சிகிச்சை மற்றும் மருத்துவத்துறையில் செய்யவேண்டிய புது புது கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்
புதிதாக மேம்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனையில் அதி நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், நோய் கண்டறியும் மருத்துவ கட்டமைப்புகள், சிறப்பு சிகிச்சை கட்டமைப்புகள் மற்றும் நோயாளிகளை முன்னிலை படுத்தி இயங்கும் வசதிகள் என அனைத்தும் உள்ளது.
மருத்துவ அறிவியல் துறையில் தற்போது உள்ள எல்லைகளை கடந்து மக்களுக்கு உயர்ந்த தரம் கொண்ட சிகிச்சையை வழங்க வேண்டும் என்ற எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் விளங்கும்.
ஜெம் மருத்துவமனையின் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் நோயாளிகள் மீதான அதன் அக்கறை கலந்த அணுகுமுறை இரண்டுமே மருத்துவத்துறையில் அதற்கிருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒன்றாக அமைகிறது .
தற்போது தரமுயர்த்தப்பட்டுள்ள இந்த புது மருத்துவமனை நோயாளிகளுக்கு உயர்ந்த தரம் கொண்ட மருத்துவ சேவைகளை வழங்குவதுடன் ஜெம் மருத்துவமனையை காஸ்ட்ரோஎன்டேரோலாஜி துறையில் தொடர்ந்து ஒரு முன்னணி மருத்துவமனையாக நிலைக்க வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 coment rios: