ரயில் எண். 22668 கோயம்புத்தூர் - நாகர்கோவில் மற்றும் ரயில் எண். 22669
கோயம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் தொற்றுநோய்களின்
போது நிறுத்தப்பட்டது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை
மாநகராட்சி நகர மக்கள், தூத்துக்குடிக்கு செல்ல சிரமப்படுகின்றனர். எனவே,
மேற்கண்ட மாநகர பயணிகளின் கருத்தில் கொண்டு, கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு, இரவு நேர ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.
ரயில் எண். 16382 (ஜெயந்தி, ஜனதா எக்ஸ்பிரஸ்) கடந்த 70 ஆண்டுகளாக கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு இயக்கப்பட்டது. கொரனா பெருந்தொற்று காலத்தில் இந்த ரயில் புனே வரை இயக்கப்பட்டது, அது மிகவும் சிரமமாக உள்ளது.
ஆகவே இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் திருப்பூர், ஈரோடு, சேலம் காட்பாடி திருப்பதி மந்திராலயம் சாலை சோலாப்பூர் மற்றும் புனே ஆகிய இடங்களில் இருந்து இரவு 10.20 மணிக்கு புனே சென்று அடைகிறது. இதனால் மும்பை செல்லும் பயணிகள் அந்த தாமதமான நேரத்தில் தங்கள் சாமான்கள் மற்றும் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ரயிலை மாற்ற வேண்டும் எனவே அந்த ரயிலை மும்பை வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ரயில் எண் 16187, ரயில் எண் 16188, ரயில் எண் 12084 ரயில் எண் 12083. ரயில் எண் 22688, ரயில் எண் 22669, ரயில் எண் 16321, ரயில் எண் 16232 மேலே குறிப்பிடப்பட்ட ரயில்கள் கொடுமுடி ரயில் நிலையங்களில் நின்று சென்றிருந்தது. ஆனால் கோவிட்க்குப் பிறகு, கொடுமுடி ரயில் நிலையத்தில் இந்த ரயில் நின்று செல்வதில்லை. கொடுமுடியில் பழங்கால ஆலயமான அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில் பிரபலமானது, மேலும் மாநிலம் முழுவதிலுமிருந்து மக்கள் இந்த கோயிலுக்கு வருவார்கள் எனவே அவர்களின் வசதிக்காக மேற்கண்ட ரயில்களை கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கோவையிலிருந்து திருப்பூர் மாநகராட்சி, ஈரோடு மாநகராட்சி சேலம் மாநகராட்சி மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்த கோவை to சேலம் பாசஞ்சர் ரயில் தண்டவாள பராமிப்பு பணிக்காக கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தப்பட்டது பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மருத்துவமனைக்கு செல்பவர்கள், வேலைக்கு பயணிகள் கோயில்களுக்கு செல்பவர்கள் நான்கு மாவட்ட பயணிகள் மிகவும் கடுமையாக சிரமப்படுகிறார்கள். ஆகவே கோவை, சேலம் பாசஞ்சர் ரயிலையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
0 coment rios: