சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
அருந்ததியர் உள்ளோதிக்கீடுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் உட்பட எதிராக செயல்படும் தலித் தலைவர்களை கண்டித்து சேலத்தில் அருந்ததியர் வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்.
அருந்ததியர் 3% உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் இட ஒதுக்கீட்டு உரிமையில் மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கின்ற வகையிலும் உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி தீர்ப்புக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுசேராய்வு மனு தாக்கல் செய்திருப்பதை கண்டித்தும், இதற்கு எதிராக செயல்படும் தலித் தலைவர்களை கண்டித்தும், அருந்ததியர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
அமைப்பின் வழக்கறிஞர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பிரதாபன் முனுசாமி உள்ளிட்டர் முன்னிலை வகித்தனர்.
அருந்ததியர் இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதி தீர்ப்ப நீ ரத்து செய்ய வலியுறுத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், மறுசீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
இந்த போராட்டம் குறித்து அருந்ததியர் மக்கள் இயக்க பொதுச் செயலாளரும், அருந்ததியர் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்தவருமான வழக்கறிஞர் பிரதாபன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் முதற்கட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்தபடியாக மாநில அளவில் அருந்ததியர் மக்களை திரட்டியும், அருந்ததியர் மக்களுக்கு ஆதரவாக செயல்படும் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் காந்தி, ரவி சின்னதுரை இளையராஜா செல்வராஜ் ஜெயக்குமார் சரவணபிரபு உலகநாதன் சித்தேஷ் துரை மாதேஷ் கல்யாணசுந்தரம் சதீஷ்குமார் தாரணி முகிலன் தூயவன் பாலகிருஷ்ணன் விக்னேஷ் வழக்கறிஞர்கள் திரளானூர் கலந்து கொண்டனர்.
0 coment rios: