கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு கொடுத்தனர்.
இதுதொடா்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.மாணிக்கம் ஆகியோருடன் கவுந்தப்பாடி ஊராட்சியை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) அளித்த மனு:-
ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கவுந்தப்பாடி கிராம ஊராட்சி. இங்கு சுமார் 6,000 விவசாய தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை அட்டை பெற்றுள்ளனர். நிலையில் இந்த கிராம ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட விவசாய தொழிலாளர்கள் தங்களது கிராம ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்த கூடாது என வலியுறுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர். மேலும் வீட்டு வரி சொத்து வரி குடிநீர் வரி உயர்வில் இருந்து தங்களை விடுபடும் வகையில் பேரூராட்சி ஆக்கும் முடிவை கை விட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
0 coment rios: