வியாழன், 19 செப்டம்பர், 2024

சேலத்தை அடுத்துள்ள பள்ளிப்பட்டியில் நிழல் தலைவராக செயல்படும் பெண் பஞ்சாயத்து தலைவரின் சித்தப்பா. தரமற்ற திட்ட பணிகளை செய்து கல்லா கட்டும் பெண் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது சித்தப்பா. இவர்கள் மீதான புகார்கள் குறித்து கண்டும் காணாமலும் உள்ள அரசு துறை அதிகாரிகள்......

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தை அடுத்துள்ள பள்ளிப்பட்டியில் நிழல் தலைவராக செயல்படும் பெண் பஞ்சாயத்து தலைவரின் சித்தப்பா. தரமற்ற திட்ட பணிகளை செய்து கல்லா கட்டும் பெண் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது சித்தப்பா. இவர்கள் மீதான புகார்கள் குறித்து கண்டும் காணாமலும் உள்ள அரசு துறை அதிகாரிகள்......

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பள்ளிபட்டி கிராமம். இந்த கிராம பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் ரோஷினி. இவரது சித்தப்பா கிருஷ்ணன். இவர்கள் இருவரின் மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒரு பெண் தலைவராக இருக்கும் பட்சத்தில் ஒன்று அவரது கணவர் பெண் தலைவருக்கு வழிகாட்டியாக இருந்து செயல்படலாம். ஆனால் இந்த பள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் பெண் தலைவருக்கு வழிகாட்டியாக நின்று சம்பந்தமே இல்லாமல் அவரது சித்தப்பா கிருஷ்ணன் செயல்பட்டு வருவது தற்பொழுது வரை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. 
குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு ஒரு மாதிரியாகவும் உயர் வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு நிறைவாகவும் ஒவ்வொரு த்திட்ட பணி செய்து வருவது, தாழ்த்தப்பட்ட பகுதி மக்களின் வேதனை குரலாகவே உள்ளது. இந்த பஞ்சாயத்தில் சாதி பாகுபாடுகள் குறித்தும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உயர் வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் பலமுறை புகார்கள் குறித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என்பது பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட பகுதி மக்களின் வேதனை குரலாகவே உள்ளது. 
இது சம்பந்தமாக தாழ்த்தப்பட்ட பகுதிகளில் நிலவி வரும் அடிப்படை தேவைகள் குறித்தும் மேம்படுத்தப்படாமல் உள்ள திட்ட பணிகள் குறித்தும் தமிழ்நாடு பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் ராம்ஜி என்பவர் பள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வழங்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு தீர்மானங்களாகவும் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் அடங்கிய கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் சரி செய்து தரப்படும் என்று கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட வட்டார வளர்ச்சி உதவி அலுவலர்கள் உறுதியளித்தனர் ஆனால் தற்பொழுது வரை கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்கு உரியதாகவே உள்ளது. 
இது போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் ஒப்பந்த பணிகளை மட்டுமே எடுத்து தரமற்ற சாலைகளை அமைத்தும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கமிஷன் தொகைகளை வழங்கி மீதமுள்ள திட்டப் பணிக்கான தொகைகளை தாங்களே பெற்றுக் கொள்வதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர் பஞ்சாயத்து தலைவரும் அவருக்கு நிழலாக செயல்பட்டு வரும் அவரது சித்தப்பா கிருஷ்ணன் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 
இதனிடையே பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரோஷினி மற்றும் அவரது சித்தப்பா கிருஷ்ணன் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்தும் பள்ளிப்பட்டி கிராமத்தில் அவர்கள் வெளிப்படுத்தி வரும் சாதிய பாகுபாடுகள் குறித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றிய தலைவர் விஜயகுமாரிடம் பலமுறை தெரிவித்தும் அவர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமலேயே இருப்பது பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களின் விரக்தி ஆகவே உள்ளது. இதனிடையே நடைபெற்று முடிந்த பள்ளிப்பட்டி கிராம சபை கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கைகளாக வழங்கி அதனை தீர்மானமாகவும் நிறைவேற்றி தற்போது வரை எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் இருப்பதை அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கவனத்திற்கு கொண்டு சென்ற தமிழ்நாடு பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் கட்டிட தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் ராம்ஜி கோரிக்கையை ஏற்று வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ள பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார் 
இந்த ஆய்வின் போது உயர் வகுப்பை சார்ந்தவர்கள் வசித்து வரும் பகுதிகளில் தரமான சாலைகளும் தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் வசித்து வரும் பகுதிகளில் தரமற்ற சாலைகளும் அமைக்கப்பட்டது தெரியவந்தது அதுமட்டுமில்லாமல் தாழ்த்தப்பட்ட பகுதியில் வசித்து வரும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட பைப்புகள் அனைத்தும் சாக்கடைக்கு நடுவிலும் சாக்கடையை ஒட்டியும் அமைக்கப்பட்டுள்ளது கண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து பணிகள் அனைத்தும் தரமான முறையில் செய்து பொதுமக்களிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். நிலைமை இப்படி இருக்க பள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் பணியாற்றி வந்த அலமேலு என்பவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளில் 95 லட்ச ரூபாய் மோசடி செய்ததாகவும் போலியாக குற்றம் சுமத்தி அவரை அவமானப்படுத்தி அலமேலு என்பவரை பணிநீக்கம் செய்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது சித்தப்பா கிருஷ்ணன். ஒரு திட்டப் பணிக்கான தொகையை வழக்கும் அதிகாரம் தலைவரிடம் உள்ள நிலையில் 2 கோடி ரூபாய் அலமேலு என்பவர் எப்படி மோசடி செய்தார் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. மேலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் என்றும் தன்னை கேவலப்படுத்தியதாகவும் அலமேலு என்ற பெண் கொடுத்த புகார் மனு வீராணம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரினை  பெற்றுக் கொண்ட வீராணம் காவல் துறையினர், பள்ளிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரோஷினி மற்றும் அவரது சித்தப்பா கிருஷ்ணன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட வழக்கு தற்பொழுது வரை நிலுவையில் உள்ளது என்பது கூடுதல் தகவலாக உள்ளது.
இது போன்றவர்கள் மீது தமிழக அரசு எப்பொழுதுதான் நடவடிக்கை எடுக்கும் என்பது மட்டுமே பள்ளிப்பட்டி கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகவே உள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: